கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி; க்ருனால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு + "||" + India England first ODI; Opportunity for Krunal Pandya, Prasidh Krishna

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி; க்ருனால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி; க்ருனால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு
தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்பை பெற்றுக்கொண்ட போது க்ருனால் பாண்டியா கண்கலங்கினார்.
புனே, 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. இந்த போட்டியை மைதானத்தில் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டியில், டாஸ் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளனர். 

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள க்ருனால் பாண்டியா மற்றும் ப்ரசித் கிருஷ்ணா இருவரும் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிஷப் பண்ட் இன்று அணியில் இடம்பெறாத நிலையில், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளார். தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்பை பெற்றுக்கொண்ட போது க்ருனால் பாண்டியா கண்கலங்கினார்.

இன்றைய ஆட்டத்திற்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்;-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ப்ரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன், அடில் ரஷித், மார்க்வுட்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,689 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியது
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.