கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 255/4 + "||" + First Test against West Indies: Sri Lanka 255/4 at the end of the 3rd day's play

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 255/4

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 255/4
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.
ஆன்டிகுவா,

ஆன்டிகுவாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாளான நேற்று எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 

பின்னர் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 86 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பெர்னாண்டோ 91 ரன்களும், திரிமன்னே 76 ரன்களும் எடுத்தனர். தற்போது தனஞ்ஜெயா டி சில்வா 46 ரன்களும், நிசாங்கா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை அணி, வெஸ்ட் இண்டிஸ் அணியை விட 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
4. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
5. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.