கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம் + "||" + IPL 2021: DC skipper Iyer may undergo surgery, likely to miss full season

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர்  விளையாடுவது சந்தேகம்
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது  இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது. ஆட்டத்தின் 8-வது ஓவரில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் அடிந்த பந்தை தடுக்க  இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர்  பாய்ந்து விழுந்த போது இடது தோள்பட்டை தரையில் பலமாக இடித்தது. 

வலியால் துடித்த அவர் அத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். காயத்தன்மையை அறிய ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முதல் கட்டமாக தெரிகிறது.

 எனினும், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பிறகு அறுவை சிகிச்சை வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யப்படும். எனவே, அறுவை சிகிச்சை செய்யப்படும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் முழுமையாக விலக வேண்டியிருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு
ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது.
2. கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நடைபெற்ற தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றி
கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நடைபெற்ற தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
3. ‘வலிமையான வீரராக விரைவில் திரும்புவேன்’- ஸ்ரேயாஸ் அய்யர்
‘வலிமையான வீரராக விரைவில் திரும்புவேன்’என ஸ்ரேயாஸ் அய்யர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.