கிரிக்கெட்

பொலார்டின் தந்தை மறைவு: தெண்டுல்கர் இரங்கல் + "||" + Kieron Pollard's father passes away; Sachin Tendulkar mourns the loss

பொலார்டின் தந்தை மறைவு: தெண்டுல்கர் இரங்கல்

பொலார்டின் தந்தை மறைவு: தெண்டுல்கர் இரங்கல்
மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரௌண்டர் கைரன் பொலார்டின் தந்தை மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை,

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரௌண்டர் கைரன் பொலார்டின் தந்தை காலமானார். இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொலார்டே வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்ற பிறகு அணி ஜெர்சியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்தப் பதிவில், "இதைவிட சிறந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொலார்ட் தந்தையின் மறைவுக்கு இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் பதிவில்  இரங்கல் தெரிவித்துள்ளார்.