கிரிக்கெட்

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து இலங்கை வீரர் திசரா பெரேரா சாதனை + "||" + Sri Lanka's Thisara Perera hits 6 sixes in one over

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து இலங்கை வீரர் திசரா பெரேரா சாதனை

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து இலங்கை வீரர் திசரா பெரேரா சாதனை
கிளப் அணிகளுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்பு, 

கிளப் அணிகளுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த புளோம் பீல்ட் கிரிக்கெட் மற்றும் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராணுவ ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்காக ஆடிய இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் 31 வயது திசரா பெரேரா 13 பந்துகளில் 8 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் தில்ஹன் கூராய் பந்து வீசிய ஒரு ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார். இதன் மூலம் அவர் தொழில்முறை கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் இந்த சாதனையை எட்டிய 9-வது வீரர் ஆவார். சாதனை படைத்த இந்த ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச மகளிர் கிரிக்கெட்: அதிக ரன்களை கடந்து மிதாலி ராஜ் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து நிலைகளிலான சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
2. நாட்டில் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில் இந்தூர் மாவட்டம் சாதனை
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரே நாளில் சாதனை அளவாக 2 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளனர்.
3. ஐ.பி.எல். போட்டி: 50 அரை சதங்கள் அடித்து டேவிட் வார்னர் சாதனை
ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர், 200 சிக்சர்கள் உள்பட பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
4. ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர்; ஏபி டி வில்லியர்ஸ் சாதனை
ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்து உள்ளார்.
5. ‘கர்ணன்’ படத்தின் சாதனை
தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை எஸ். தாணு தயாரிக்க, மாரி செல்வராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.