கிரிக்கெட்

ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாததால் பந்து வீச்சில் கூடுதல் பொறுப்பை ஏற்க தயார் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் கிறிஸ் மோரிஸ் பேட்டி + "||" + Rajasthan Royals bowler Chris Morris ready to take on extra charge due to absence of Zopra Archer

ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாததால் பந்து வீச்சில் கூடுதல் பொறுப்பை ஏற்க தயார் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் கிறிஸ் மோரிஸ் பேட்டி

ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாததால் பந்து வீச்சில் கூடுதல் பொறுப்பை ஏற்க தயார் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் கிறிஸ் மோரிஸ் பேட்டி
ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாததால் பந்து வீச்சில் கூடுதல் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் கூறியுள்ளார்.
மும்பை, 

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. ஏலத்தில் ரூ.16¼ கோடி என்ற சாதனை தொகைக்கு விலை போன தென்ஆப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார். வேகப்பந்து வீசுவதுடன், கடைசி கட்டத்தில் அதிரடியாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். ராஜஸ்தான் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு இருப்பதால், ஐ.பி.எல். தொடரில் முதற்கட்ட ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை. இதனால் கிறிஸ் மோரிசுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அனேகமாக அவர் தான் ஆரம்ப கட்ட தாக்குதலை தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 12-ந்தேதி பஞ்சாப் கிங்சை மும்பையில் சந்திக்கிறது. இந்த நிலையில் 33 வயதான கிறிஸ் மோரிஸ் காணொலி மூலம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் விளையாடிய ஒவ்வொரு அணியிலும் தொடக்கத்திலும், கடைசி கட்டத்திலும் பந்து வீசுவதே எனது பணியாக இருந்துள்ளது. இந்த தடவையும் அதில் மாற்றம் இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு அணியிலும் எப்போதும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் பணியையும் செய்திருக்கிறேன். எனவே புதிய பந்தில் பவுலிங் செய்வதும், மற்ற பவுலர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் செயல்படுவதும் எனக்கு புதிது அல்ல. அதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் பந்து வீச்சுக்கு தலைமை தாங்கி புதிய பந்தில் வீசும் போது கொஞ்சம் பொறுப்பு அதிகரித்து விடும். ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்ககட்ட ஆட்டங்களை தவற விடுவது துரதிர்ஷ்டவசமானது. இது நிச்சயம் இழப்பு தான். விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.

பெரிய தொகையால் நெருக்கடி

இந்த ஐ.பி.எல்.-ல் நான் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறேன். இது போன்ற அதிக தொகை கிடைக்கும் போது இயல்பாகவே சற்று நெருக்கடி வந்து விடும். எனக்கு நெருக்கடி இல்லை என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். அதிர்ஷ்டவசமாக ஐ.பி.எல்.-ல் இதற்கு முன்பும் நான் பெரிய தொகை முத்திரையுடன் விளையாடிய அனுபவத்தை பெற்றிருக்கிறேன். எது எப்படியோ களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் அது தான் மிகவும் முக்கியம்.

இவ்வாறு கிறிஸ் மோரிஸ் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
2. ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு: ‘மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்’ ஜெ.தீபா பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
3. ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’
ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்
மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
5. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.