கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சேர்ப்பு + "||" + Jason Roy joins Sunrisers Hyderabad as late IPL replacement for Mitchell Marsh

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சேர்ப்பு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சேர்ப்பு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்குப் பதில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை,

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ் கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கினார். ஆனால், காயம் காரணமாக தொடரிலிருந்து அவர் வெளியேறினார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக மார்ஷ் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ராய் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.