கிரிக்கெட்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி... + "||" + Sachin Tendulkar hospitalised as precautionary measure days after testing positive for Coronavirus

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி...

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 27-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சச்சின் டெண்டுல்கர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் இன்னும் சில நாட்களிள் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள். உலகக்கோப்பையை வெற்றியின் 10-வது ஆண்டு விழாவில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர் வீடு திரும்பினார்...
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர் இன்று வீடு திரும்பியுள்ளார்.