கிரிக்கெட்

உலக கோப்பை போட்டிக்கு கூடுதல் வீரர்களை தேர்வு செய்ய ஐ.சி.சி. அனுமதி + "||" + The ICC has decided to select additional players for the World Cup Permission

உலக கோப்பை போட்டிக்கு கூடுதல் வீரர்களை தேர்வு செய்ய ஐ.சி.சி. அனுமதி

உலக கோப்பை போட்டிக்கு கூடுதல் வீரர்களை தேர்வு செய்ய ஐ.சி.சி. அனுமதி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர் 8 பேர் என்று மொத்தம் 23 பேரை வைத்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 30 ஆக ஐ.சி.சி. உயர்த்தியுள்ளது. கூடுதலாக உள்ள 7 பேர் வீரர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ இருக்கலாம்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் தங்களை உட்படுத்தியே வீரர்கள் போட்டியில் பங்கேற்கும் நிலைமை உள்ளது. அதனால் அவசரம் கருதியோ அல்லது காயத்தாலோ ஒரு வீரர் விலகும் போது அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்தாலும் உடனடியாக களம் இறக்க முடியாது. தனிமைப்படுத்துதல் நடைமுறை எல்லாம் முடித்த பிறகே இணைய முடியும். இதை கருத்தில் கொண்டு முதலிலேயே கணிசமான வீரர்களை தேர்வு செய்ய ஐ.சி.சி. இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் பெண்கள் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளின் போது அணிகள் தங்களது வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி : இந்திய குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, 6 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனியை சந்திக்கிறது.
2. கோப்பையை வெல்ல டாஸ் முக்கிய பங்கு வகிக்காது : ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்
டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம்.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
4. 20 ஓவர் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியா
ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 125 ரன்களுக்கு ஆல்-அவுட்
டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 125 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.