கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + IPL 2021: One member of Chennai Super Kings's content team tests positive for Covid-19

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9-ம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் வீரர், ஊழியர்கள் எனப் பலரும் கொரோனாவால் பதிக்கப்பட்டு வருவதால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து இன்று காலை டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் அக்சர் படேலுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக வீரர்கள், பயிற்சியாளர்களுடன் நெருங்கி நின்று பேசவில்லை என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் 2021 சீசனில் வருகிற 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக தற்போது சென்னை அணி வீரர்கள் மும்பையில் தங்கியுள்ளனர். சில வீரர்கள் அணியுடன் இணைந்து வருகிறார்கள். சிலர் தங்களை பயணம் தொடர்பாக தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்பின் பயோ-செக்யூர் வளையத்திற்குள் செல்வார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொல்கத்தா அணி 2 வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. மும்பை அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.
3. சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், இயக்குனருமான எல்.சபாரத்தினம் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
5. ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.