கிரிக்கெட்

இந்திய அணியில் பிடித்தமான வீரர் யார்? கங்குலி ருசிகர பதில் + "||" + Who is the favorite player of Indian team? Ganguly delicious answer

இந்திய அணியில் பிடித்தமான வீரர் யார்? கங்குலி ருசிகர பதில்

இந்திய அணியில் பிடித்தமான வீரர் யார்? கங்குலி ருசிகர பதில்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் தற்போதைய இந்திய அணியில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு சவுரவ் கங்குலி அளித்த பதிலில், ‘இந்திய அணியில் சில அற்புதமான வீரர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்ற முறையில் என்னை கவர்ந்த வீரர் யார் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடாது. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைவருமே எனக்கு பிடித்தமானவர்கள் தான். ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மாவின் பேட்டிங்கை ரசித்து பார்க்கிறேன். இதே போல் தனிநபராக ஆட்டத்தில் வெற்றி தேடித்தரக்கூடியவர் என்ற வகையில் ரிஷாப் பண்ட் ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமியும் சிறப்பானவர்கள். ஷர்துல் தாகூரையும் விரும்புகிறேன். அவர் களத்தில் துணிச்சலாக செயல்படக்கூடியவர்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.