கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. + "||" + Will South Africa retaliate against Pakistan? The 2nd one day match is happening today

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 274 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் சதத்தின் உதவியுடன் கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் தீவிரத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியுடன் குயின்டான் டி காக் உள்ளிட்ட சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்காக இந்தியாவுக்கு புறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: புதிய அட்டவணை அறிவிப்பு
போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
2. இலங்கை நபர் எரித்து கொலை; 'இளமையின் குதூகலம், எப்போதும் நடப்பதுதான்’ - பாக்.மந்திரி சர்ச்சை பேச்சு
பாகிஸ்தானில் இலங்கை நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘இளமையின் குதூகலம்’ மற்றும் இது ‘எப்போதும் நடப்பது தான்’ என பாகிஸ்தான் மந்திரி கூறினார்.
3. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் 2 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
4. வங்கதேசம்-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு
வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
5. இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் பதிவிட்ட விவகாரம்: டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம்
பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பிய இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.