கிரிக்கெட்

பெண்கள் தேசிய சீனியர் கிரிக்கெட்: ரெயில்வே அணி சாம்பியன் + "||" + Women's National Senior Cricket: Railway Team Champion

பெண்கள் தேசிய சீனியர் கிரிக்கெட்: ரெயில்வே அணி சாம்பியன்

பெண்கள் தேசிய சீனியர் கிரிக்கெட்: ரெயில்வே அணி சாம்பியன்
பெண்கள் தேசிய சீனியர் கிரிக்கெட் போட்டியில் ரெயில்வே அணி 12-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ராஜ்கோட், 

பெண்களுக்கான தேசிய சீனியர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ரெயில்வே-ஜார்கண்ட் அணிகள் சந்தித்தன. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 167 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 

தொடர்ந்து பேட்டிங் செய்த மிதாலிராஜ் தலைமையிலான ரெயில்வே அணி 37 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பூனம் ரவுத் (59 ரன்), சபினெனி மேஹனா (53 ரன்) ஆகிய வீராங்கனைகளின் அரைசதம் அந்த அணியின் வெற்றியை எளிதாக்கியது. ரெயில்வே அணி இந்த பட்டத்தை வெல்வது இது 12-வது முறையாகும்.