கிரிக்கெட்

சேஸிங்கில் அதிக ரன்கள்; புதிய சாதனை படைத்தார் பாக்.வீரர் பகார் ஸமான் ! + "||" + Don't regret not getting the double, regret losing the match - Fakhar Zaman

சேஸிங்கில் அதிக ரன்கள்; புதிய சாதனை படைத்தார் பாக்.வீரர் பகார் ஸமான் !

சேஸிங்கில் அதிக ரன்கள்;  புதிய சாதனை படைத்தார் பாக்.வீரர் பகார் ஸமான் !
ரன் இலக்கை துரத்தும் போது அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தான் வீரர் பகார் ஸமான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சேஸிங் அதாவது ரன் இலக்கை துரத்தும் போது அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தான் வீரர் பகார் ஸமான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.  155 பந்துகளில் 193 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த சாதனையை பகார் ஸமான் படைத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற 342 ரன்கள் இமாலய இலக்கை பாகிஸ்தான் துரத்தியது. அபாரமாக ஆடிய பகார் ஸமான்  கடைசி ஓவரில் கவனக்குறைவால் தனது விக்கெட்டை ரன் அவுட் மூலம் தாரைவார்த்தார். இதனால், பாகிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

 இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்),  ரன்கள் எடுத்து சாதனை பட்டியலில் இடம் பிடித்து இருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2. காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது
3. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.
4. பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம்
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அங்கிருந்த வக்கீல்கள் அடித்து, உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.