கிரிக்கெட்

பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சை: விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? + "||" + Bahar Zaman 'run-out' controversy: Will action be taken against wicketkeeper Quinton de Gock?

பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சை: விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சை: விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சை: விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
ஜோகன்னஸ்பர்க், 

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தை அடித்து விட்டு 2-வது ரன்னுக்காக ஓடுகையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் (193 ரன்கள்) தென்ஆப்பிரிக்க வீரர் மார்க் ராமால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். இந்த ‘ரன்-அவுட்’ கடும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது பஹர் ஜமானின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் செயல்பட்டதே ரன்-அவுட்டுக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

எதிர்முனை ஸ்டம்பின் அருகில் நின்ற பந்து வீச்சாளர் நிகிடியை நோக்கி பந்தை எறியும்படி குயின்டான் டி காக் சைகை காட்டியதால் பஹர் ஜமான் பந்து தன்பக்கம் வரவில்லை என்று நினைத்து ஓட்ட வேகத்தை குறைத்ததுடன், மறுமுனையில் நின்ற பேட்ஸ்மேன் ஹாரிஸ் ராவுப்பை திரும்பி பார்த்தார். ஆனால் பீல்டர் வீசிய பந்து விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நின்ற ஸ்டம்பை நேராக தாக்கியது. ‘ரன்-அவுட்’ விஷயத்தில் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிராக செயல்பட்ட டி காக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் நடுவர்கள் தான் முடிவு செய்ய முடியும் என்று போட்டிக்கான விதியை உருவாக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. போஸ்டரால் வெடித்த சர்ச்சை - சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2. கங்கனா சர்ச்சை கருத்து: “பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்” - வலுக்கும் கோரிக்கை..!
சர்ச்சை கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
3. ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ‘சொமேட்டோ’ ஊழியர் கூறியதால் சர்ச்சை
சமூக வலைத்தளங்களில் வைரலானது: ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ஊழியர் கூறியதால் சர்ச்சை மன்னிப்பு கேட்ட ‘சொமேட்டோ’ நிறுவனம்.
4. அரசு அதிகாரிகள் குறித்து உமா பாரதியின் சர்ச்சை பேச்சு - சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!
அரசு அதிகாரிகளின் நிலை குறித்து உமா பாரதி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
5. மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது; எடியூரப்பா சர்ச்சை பேச்சு
மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.