கிரிக்கெட்

ஐ.பி.எல் : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா + "||" + RCB's Daniel Sams tests positive for COVID-19

ஐ.பி.எல் : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா

ஐ.பி.எல் : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா
பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு அதனை பின்பற்றியே அணியுடன் இணைய அனுமதி அளிக்கப்படுகிறது.  

இந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சேர்ந்த டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தொற்று அறிகுறிகள் இல்லாதநிலையில், டேனியல் சாம்ஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த  பெங்களூரு வீரர் பட்டிக்கல் தேவ்தத் கொரோனா தொற்று குணம் அடைந்ததையடுத்து அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் சாம்ஸ் ஆல்ரவுண்டர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,306 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் கமல்ஹாசன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
'தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன்.எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ என டுவீட்.
4. டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா
டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.