கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் + "||" + Pakistan Won aginst South Africa in 3rd ODI Match

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
செஞ்சுரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளிடையே 2 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்திருந்தன. அதில் இரு அணிகளும் ஒரு முறை வெற்றிபெற்று 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனால், பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பகர் சமான் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 57 ரன்கள் எடுத்த நிலையில் மகாராஜ் பந்துவீச்சில் இமாம் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் களமிறங்கினார். பகர் சமான் - பாபர் ஆசம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய பகர் சமான் சதம் விளாசினார். 104 பந்துகளில் 101 ரன் எடுத்த நிலையில் பகர் சமான் அவுட் ஆகி வெளியேறினார்.

பாபர் ஆசம் 94 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் மகாராஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ராம் களமிறங்கினர். 18 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகீன் அப்ரடி பந்துவீச்சில் மார்க்ராம் வெளியேறினார். அடுத்துவந்த ஸ்முட்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிவந்த தொடக்க வீரர் மாலன் 70 ரன்னில் வெளியேறினார். 

அதன்பின் களமிறங்கிய கெலி வெர்னே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும், அடில் பெலுக்வாயோ 54 ரன்னில் ஹசன் அலி பந்து வீச்சில் அவுட் ஆனார். 

ஆனால், எஞ்சிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் தென் ஆப்பிரிக்க அணி 49.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிக்காவை 28 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரடி மற்றும் முகமது நவாஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

1. பாபர் அசாம் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.