கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் + "||" + South Africa vs Pakistan 3rd ODI Highlights: Pakistan win by 28 runs

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை எட்டிய பஹர் ஜமான் 101 ரன்களும் (104 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் 94 ரன்களும் (82 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். கடைசி பந்தில் சதத்துக்கு சிக்சர் தேவைப்பட்ட போது பந்தை தூக்கியடித்த பாபர் அசாம் கேட்ச் ஆகிப்போனார்.

அடுத்து களம் கண்ட தென்ஆப்பிரிக்கா 128 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பின்னர் கைல் வெரைன் (62 ரன்), பெலக்வாயோ (54 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்ட போதிலும் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. அந்த அணி 49.3 ஓவர்களில் 292 ரன்னில் ஆல்-அவுட் அனது.

இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குயின்டான் டி காக், ரபடா, நோர்டியா, நிகிடி, டேவிட் மில்லர் ஆகிய முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்காக விலகியது தென்ஆப்பிரிக்க அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

அடுத்து பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையே 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் வருகிற 10-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை
ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்
2. பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
3. பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பஸ்-லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியானார்கள்.
4. 2வது டி20 போட்டி: 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
5. ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது- பாக்.வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.