கிரிக்கெட்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா? ஐ.சி.சி. அதிகாரி பதில் + "||" + We have backup plans for T20 World Cup in India but proceeding as planned now: ICC

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா? ஐ.சி.சி. அதிகாரி பதில்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா? ஐ.சி.சி. அதிகாரி பதில்
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டதால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) இடைக்கால தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் (ஆஸ்திரேலியா) நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளை தொடங்குகிறோம். இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டத்தையும் (வேறு நாட்டுக்கு மாற்றுவது) கைவசம் வைத்துள்ளோம். ஆனால் மாற்றுத்திட்டம் குறித்து நாங்கள் இன்னும் எதுவும் விவாதிக்கவில்லை.. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதற்குரிய நேரம் வரும் போது மாற்று திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்குவோம். இதற்கு என்று காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. உலக கோப்பை போட்டிக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. அதற்குள் சூழ்நிலை எப்படி இருக்கிறது, மற்ற போட்டிகள் எல்லாம் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம்.

பல்வேறு நாடுகளில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து நாங்கள் கற்று வருகிறோம். கடினமான கொரோனா காலத்தை மற்ற விளையாட்டு அமைப்புகள் எப்படி சமாளிக்கின்றன என்பதை அவர்களிடமும் பேசி தெரிந்து கொள்கிறோம். அடுத்த 2 மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் வருகிறது. இரண்டு போட்டிகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருவேளை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டிய நிலைமை உருவானால், ஐக்கிய அரபு அமீரத்துக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு ஏற்கனவே கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வெற்றிகரமாக நடந்தது நினைவு கூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!
ஜெர்மனியில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
3. ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா
ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 33,796 பேருக்கு கொரோனா: மேலும் 1,238 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,796 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மத்தியப் பிரதேசம்: 9 ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா
ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.