கிரிக்கெட்

பாகிஸ்தானை விட ஐபிஎல் முக்கியமா, இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல - ஷாகித் அப்ரிடி கண்டனம் + "||" + T20 leagues influencing international cricket Shahid Afridi

பாகிஸ்தானை விட ஐபிஎல் முக்கியமா, இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல - ஷாகித் அப்ரிடி கண்டனம்

பாகிஸ்தானை விட ஐபிஎல் முக்கியமா,  இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல - ஷாகித் அப்ரிடி கண்டனம்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போதே பாதியிலேயே வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்புவது வியப்பாக இருக்கிறது என தென் ஆப்பிரிக்க வாரியத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி

தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் அணியின் பயணம் மேற்கொண்டிருந்தனர். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முடிந்தது. இந்தத் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆனால், இந்தத் தொடர் முடியும் முன்பே தென் ஆப்பிரிக்க வீரர்கள், குயின்டன் டீ காக், ரபாடா, ஆன்ரிச் நார்ஜே, கிறிஸ் மோரிஸ் ஆகியோரை ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்குச் செல்ல தென் ஆப்பிரிக்க வாரியம் அனுமதித்தது.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தான் அணியைவிட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் முக்கியமானதா என்ற ரீதியில் விமர்சித்துள்ளார்.

அப்ரிடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள  கருத்தில்  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்ட விதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியுடன் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடர் விளையாடி வருகிறது. ஆனால், தொடர் முடியும் முன்பே பாதியிலேயே முக்கிய வீரர்களை ஐபிஎல் தொடருக்காகச் செல்ல வாரியம் அனுமதித்தது வியப்பாக இருக்கிறது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போன்ற 20 ஓவர்  லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல, இதை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிரபல பெண் எழுத்தாளர்
கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்து பிரபல பெண் எழுத்தாளர் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
3. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
4. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
5. ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.