கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நடைபெற்ற தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றி + "||" + Shreyas Iyer Undergo successful shoulder surgery

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நடைபெற்ற தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றி

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நடைபெற்ற தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றி
கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு நடைபெற்ற தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மும்பை,

புனேவில் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஸ்ரேயாஸ் அய்யர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரேயாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு
ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது.
2. ‘வலிமையான வீரராக விரைவில் திரும்புவேன்’- ஸ்ரேயாஸ் அய்யர்
‘வலிமையான வீரராக விரைவில் திரும்புவேன்’என ஸ்ரேயாஸ் அய்யர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
3. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம்
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.