கிரிக்கெட்

காயத்தால் பவுமா விலகல்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் மோதும் 20 ஓவர் போட்டி - இன்று நடக்கிறது + "||" + Bowma dislocation due to injury: 20 overs match between South Africa and Pakistan - Happening today

காயத்தால் பவுமா விலகல்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் மோதும் 20 ஓவர் போட்டி - இன்று நடக்கிறது

காயத்தால் பவுமா விலகல்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் மோதும் 20 ஓவர் போட்டி - இன்று நடக்கிறது
தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த டெம்பா பவுமா காயத்தால் விலகியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க், 

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த டெம்பா பவுமா தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் தொடரில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதே போல் விலாபகுதியில் காயமடைந்துள்ள ஆல்-ரவுண்டர் பிரிட்டோரிசும் ஆடமாட்டார். ஏற்கனவே குயின்டான் டி காக், ரபடா, டேவிட் மில்லர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் தவிக்கும் தென்ஆப்பிரிக்க அணிக்கு சில வீரர்கள் காயத்தில் சிக்கியிருப்பது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்த நல்ல வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.