கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாசன் பெரென்டோர்ப் சேர்ப்பு + "||" + Jason Berendorp joins Chennai Super Kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாசன் பெரென்டோர்ப் சேர்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாசன் பெரென்டோர்ப் சேர்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாசன் பெரென்டோர்ப் சேர்ப்பை ஒப்பந்தம் செய்துள்ளது.
மும்பை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் சமீபத்தில் விலகினார். அவர் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாகவும், அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு உடல் ரீதியாகவும், மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக 11 ஒருநாள் மற்றும் ஏழு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் 30 வயதான பெரென்டோர்ப் 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.