கிரிக்கெட்

பகத் வர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’ + "||" + Bhagat Verma Chennai Super Kings IPL-2021

பகத் வர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’

பகத் வர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’
சுழற்பந்து வீச்சாளர் நிறைந்திருக்கும் சி.எஸ்.கே. அணியில் புதிதாக இணைந்திருக்கும், இளம் சுழற்பந்து வீச்சாளர் இவர்.
ஐதராபாத் இவரது சொந்த ஊர். 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுகிறார். 2017-ம் ஆண்டு கூச் பெகார் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி, 38 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ராகுல் டிராவிட்டின் கவனத்தை ஈர்த்த பகத், அந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அதற்கு பிறகு, ஐதராபாத் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பகத், இந்த சீசனில் சி.எஸ்.கே.வில் இணைந்திருக்கிறார். ‘‘ஒரு போட்டியையும் இவன் தவறவிட்டதில்லை. சில மாதங்களாக, அவனை ஓரங்கட்டி வந்தனர். ஆனால் கடவுளின் கிருபையால், சி.எஸ்.கே. அணியில் தேர்வாகி இருக்கிறான்’’ என்று பெருமிதப்படுகிறார், பகத்தின் தாய், உமா தேவி. இவர் சிறந்த ஆல் ரவுண்டரும் கூட.