கிரிக்கெட்

சேத்தன் சக்காரியா (ராஜஸ்தான் ராயல்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’ + "||" + Chetan Zachariah Rajasthan Royals IPL-2021

சேத்தன் சக்காரியா (ராஜஸ்தான் ராயல்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’

சேத்தன் சக்காரியா (ராஜஸ்தான் ராயல்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’
ராஜஸ்தான் அணி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் இதுதான். ‘‘சேத்தன் சக்காரியா, புதுமுக வீரர். 23 வயதுதான் ஆகிறது.
சூரத்தை சேர்ந்த சேத்தன், மிதவேக பந்துவீச்சாளர். உள்ளூர் அணிகளுக்குள் மட்டுமே பிரபலமான இவர், இந்த சீசன் ஏலத்தில் ரூ.1.2 கோடிக்கு, ராஜஸ்தான் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டார். இதுதொடர்பாக நிறைய சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு ராஜஸ்தான் அணி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் இதுதான். ‘‘சேத்தன் சக்காரியா, புதுமுக வீரர். 23 வயதுதான் ஆகிறது. இருப்பினும் இவரை 1.2 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை நாங்கள் வெளிப்படுத்துவதை விட, இவரது பந்து வீச்சு திறமை வெளிப்படுத்தும். அதை வரும் போட்டிகளில் காணுங்கள்’’ என்று சேத்தனின் திறமைக்கு, புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். இதுவரை 16 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் சேத்தன், 28 விக்கெட்டுகளை, 7.08 ரன்கள் என்ற எக்கனாமியில் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில், 5 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைந்திருக்கிறார்.