கிரிக்கெட்

‘டோனியை திட்டிய டிராவிட்’ ஷேவாக் வெளியிட்ட தகவல் + "||" + ‘Dravid insults Tony’ Sehwag reports

‘டோனியை திட்டிய டிராவிட்’ ஷேவாக் வெளியிட்ட தகவல்

‘டோனியை திட்டிய டிராவிட்’ ஷேவாக் வெளியிட்ட தகவல்
‘டோனியை டிராவிட் திட்டியதாக ஷேவாக் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் களத்தில் கோபப்படமாட்டார், மிகவும் பொறுமைசாலி என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது அவர் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில் காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக கத்துவது, கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த காட்சியை பார்த்த இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், டிராவிட் ஒரு முறை டோனியிடம் கோபப்பட்ட புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஷேவாக் கூறும் போது, ‘கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் நிதானத்தை இழந்து கோபப்பட்டதை நான் பார்த்து இருக்கிறேன். 2006-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடினோம். அப்போது டோனி இந்திய அணியின் புதிய வரவு. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டோனி ஒரு ஷாட் அடித்து ‘பாயிண்ட்’ திசையில் கேட்ச் ஆனார். ஆட்டமிழந்து வெளியேறிய டோனியிடம், டிராவிட் மிகவும் கோபப்பட்டார். இந்த மாதிரி தான் விளையாடுவாயா? நீ ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று கூறி சத்தம் போட்டார். டிராவிட் ஆங்கிலத்தில் திட்டிய வார்த்தைகளில் பாதி எனக்கு புரியவில்லை. நான் அப்படியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். பிறகு அடுத்த ஆட்டத்தில் டோனி பெரிய அளவில் ஷாட்டுகள் அடிக்கவில்லை. அவரிடம் நான், உனக்கு என்ன பிரச்சினை என்று விசாரித்தேன். அதற்கு அவர் நான் மீண்டும் டிராவிட்டிடம் திட்டு வாங்க விரும்பவில்லை. ஆட்டத்தை நிதானமாக ஆடி முடித்து விட்டு திரும்பலாம் என்று கூறினார்’ என்றார்.