கிரிக்கெட்

ஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம் + "||" + IPL Want to score more sixes in the game - Jose Butler option

ஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம்

ஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மும்பை,

கேள்வி: நடப்பு ஐ.பி.எல். தொடரில் எந்த அணிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குகிறீர்கள்?

பதில்: சென்னை சூப்பர் கிங்ஸ்.

கேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் உங்களது தனிப்பட்ட இலக்கு என்ன?

பதில்: கோப்பையை வெல்ல வேண்டும்.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் எந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பதில்: ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை (இந்த வகையில் கிறிஸ் கெய்ல் ஒரு இன்னிங்சில் 17 சிக்சர் விளாசியதே சாதனையாக உள்ளது) நிகழ்த்த வேண்டும்.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது சிறந்த செயல்பாடு எது?

பதில்: 2018-ம் ஆண்டு மும்பை இந்தியன்சுக்கு எதிராக 94 ரன்கள் விளாசிய இன்னிங்ஸ்.

கேள்வி: கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் போது கடினமாக நினைக்கும் விஷயம்?

பதில்: அறையில் தனிமையில் முடங்குவதால் எழும் அச்சம்.

இவ்வாறு அவர் கூறினார்.