கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட்: 3 அணிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் + "||" + Women's T20 Challenge likely to remain three-team affair

பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட்: 3 அணிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல்

பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட்: 3 அணிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல்
பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு போல் இந்த முறையும் 3 அணிகள் கலந்து கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தின் போது நடத்தப்படும் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு போல் இந்த முறையும் 3 அணிகள் கலந்து கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த போட்டி டெல்லியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீராங்கனைகள் கலந்து கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.