கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா விரைவில் பந்து வீசுவார் மும்பை அணியின் இயக்குனர் ஜாகீர்கான் தகவல் + "||" + Hardik Pandya will bowl soon Director of the Mumbai team Zakir Khan Info

ஹர்திக் பாண்ட்யா விரைவில் பந்து வீசுவார் மும்பை அணியின் இயக்குனர் ஜாகீர்கான் தகவல்

ஹர்திக் பாண்ட்யா விரைவில் பந்து வீசுவார் மும்பை அணியின் இயக்குனர் ஜாகீர்கான் தகவல்
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தோள்பட்டை பிரச்சினை காரணமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பந்து வீசவில்லை.
சென்னை, 

ஐ.பி.எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தோள்பட்டை பிரச்சினை காரணமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டும் செய்தார். இந்த நிலையில் மும்பை அணியின் இயக்குனரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசினார். தோள்பட்டையில் அவருக்கு லேசான வலி இருப்பதால் ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பந்து வீசவில்லை. அவரது காயம் குறித்து பிசியோதெரபிஸ்டிடம் கலந்து ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படும். அவர் பந்து வீசுவதை நீங்கள் விரைவில் பார்க்கலாம். பந்து வீச்சிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். 6-வது பவுலர் வாய்ப்பாக பொல்லார்ட்டை பயன்படுத்துவோம். குயின்டான் டி காக் அணியினருடன் இணைந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாட தயாராக இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.