கிரிக்கெட்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டபிள்யூ.வி.ராமன் மீண்டும் விண்ணப்பம் + "||" + Former India opener WV Raman set to re-apply for women's coach's post

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டபிள்யூ.வி.ராமன் மீண்டும் விண்ணப்பம்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டபிள்யூ.வி.ராமன் மீண்டும் விண்ணப்பம்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டபிள்யூ.வி.ராமன் மீண்டும் விண்ணப்பிக்க உள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமனின் பதவி காலம் கடந்த அக்டோபருடன் நிறைவடைந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் வரை அவர் அந்த பணியில் நீடித்தார். 

இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே உள்ளூர் அல்லது சர்வதேச போட்டியில் பயிற்சியாளராக இருந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டபிள்யூ.வி.ராமன் மீண்டும் பதவிக்கு விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது.