கிரிக்கெட்

சூதாட்டம்: ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை + "||" + Heath Streak Banned For 8 Years For Breaching ICC Anti-Corruption Code

சூதாட்டம்: ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை

சூதாட்டம்: ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
துபாய்

ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக புகழப்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டபோது, ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக, லஞ்சம் பெறுதல், மேட்ச் பிக்ஸிங்  தகவல்கள் பரிமாறுதல் போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது.

இதில் 5 விதமான குற்றச்சாட்டுகளைத் தான் செய்ததாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டதை அடுத்து, 8 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 விதமான குற்றச்சாட்டுகளை ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக் கொண்டதையடுத்து, இந்தத் தடையை ஐசிசி பிறப்பித்துள்ளது. 2029-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதிதான் சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ ஹீத் ஸ்ட்ரீக் இனிமேல் பங்கேற்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா;அது எப்படி நடந்தது என்று சொல்வது மிகவும் கடினம் -பிசிசிஐ தலைவர் கங்குலி
ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல் ; 4 பேர் கைது
பணத்துக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தபட்டார். பின்னர் அவர் விடுவிக்கபட்டார் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
4. இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
5. பாகிஸ்தானை விட ஐபிஎல் முக்கியமா, இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல - ஷாகித் அப்ரிடி கண்டனம்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போதே பாதியிலேயே வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்புவது வியப்பாக இருக்கிறது என தென் ஆப்பிரிக்க வாரியத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.