ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்டிரிக்குக்கு 8 ஆண்டுகள் தடை


ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்டிரிக்குக்கு 8 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 15 April 2021 12:04 AM GMT (Updated: 15 April 2021 12:04 AM GMT)

ஐ.பி.எல்., வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் போட்டி அணிகளின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார்.

துபாய், 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 47 வயது ஹீத் ஸ்டிரிக் அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல்., வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் போட்டி அணிகளின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார். அவர் 2017, 2018-ம் ஆண்டுகளில் பயிற்சியாளராக இருக்கையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு விதிமுறைக்கு மாறாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் அணி குறித்த தவகல்களை வெளிநபர்களுக்கு அளித்ததாகவும், வீரர்களை சூதாட்ட நபர்கள் அணுக ஆதரவாக இருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஐ.சி.சி. நேர்மை கமிட்டி ஹீத் ஸ்டிரிக்குக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. இதனால் அவர் 2029-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை கிரிக்கெட் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது.

Next Story