கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு + "||" + IPL Cricket; Target of 148 runs for Rajasthan Royals

ஐ.பி.எல். கிரிக்கெட்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

2வது ஓவரில் ப்ரித்வீ ஷா(2 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேற, ஷிகர் தவான்(9 ரன்கள்) 4வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்த நிலையில், பவுல்ட் ஆனார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் உனட்கட் பந்துவீச்சில் டெல்லியின் 3 தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அணி சற்று தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், லலித் யாதவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 32 ரன்களில் 51 ரன்கள் சேர்த்தார். இது தவிர டெல்லி அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 20 ரன்கள், டாம் கர்ரன் 21 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் உனட்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மாரிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து தற்போது 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை பந்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: அதிரடி காட்டிய ருதுராஜ் - மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்கு
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 156 ரன்கள் எடுத்துள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதல் பேட்டிங்
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.