கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி + "||" + IPL Cricket: Rajasthan Royals win by 3 wickets

ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
மும்பை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

2வது ஓவரில் ப்ரித்வீ ஷா(2 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேற, ஷிகர் தவான்(9 ரன்கள்) 4வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் ஆனார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் உனத்கட் பந்துவீச்சில் டெல்லியின் 3 தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அணி சற்று தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், லலித் யாதவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 32 ரன்களில் 51 ரன்கள் சேர்த்தார். இது தவிர டெல்லி அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 20 ரன்கள், டாம் கர்ரன் 21 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மாரிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் மற்றும் மனன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மனன் வோக்ரா 9(11) ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் 2 (7) ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 (3) ரன்னிலும், சிவம் துபே 2 (7) ரன்னிலும், ரியான் பராக் 2 (5) ரன்னிலும், ராகுல் திவாடியா 19(17) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 62 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் கிறிஸ் மோரிஸ் 36 (18) ரன்களும், ஜெய்தேவ் உனத்கட் 11 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அவிஷ் கான் 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து டிரென்ட் பவுல்ட் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய நியூசிலாந்து வீரர்களில் கேன் வில்லியம்சன் உள்பட 4 பேர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வருகிற 11-ந்தேதி டெல்லியில் இருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விரும்பும் கவுண்டி அணிகள்
பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் முன்வந்துள்ளன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா கொரோனாவால் பாதிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சமாளிக்குமா ஐதராபாத்?
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் வீழ்ந்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.