கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு + "||" + Shams Mulani Short-term Replacement For Axar Patel; Anirudha Joshi Replaces Shreyas Iyer

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு
ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே விலகி விட்டார். அவருக்கு பதிலாக அனிருதா ஜோஷி டெல்லி அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்த அனிருதா ஜோஷி ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்றிருந்தாலும், ஐ.பி.எல்.-ல் இன்னும் அறிமுகமாகவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அனிருதா ஜோஷி, ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடியவர் ஆவார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் டெல்லி அணியின் பிரதான சுழற்பந்து அக்‌ஷர் பட்டேலுக்கு பதிலாக குறுகிய கால ஒப்பந்தம் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஷம்ஸ் முலானி சேர்க்கப்பட்டுள்ளார். அக்‌ஷர் பட்டேல் குணமடைந்து அணியில் மீண்டும் இணையும் வரை ஷம்ஸ் முலானி நீடிப்பார்.

தொடர்புடைய செய்திகள்

1. அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம்: ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை..!
முதல் இன்னிங்ஸ்சில் சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ்சில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார்.