கிரிக்கெட்

‘விஸ்டன்’ பட்டியலில் இடம்பெற்ற சச்சின், விராட்கோலி + "||" + Virat Kohli named Wisden Almanack’s ODI cricketer of the 2010s; Tendulkar, Kapil also awarded

‘விஸ்டன்’ பட்டியலில் இடம்பெற்ற சச்சின், விராட்கோலி

‘விஸ்டன்’ பட்டியலில் இடம்பெற்ற சச்சின், விராட்கோலி
‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட்கோலி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
லண்டன், 

 ‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளது. 

இதன்படி 1970-களில் விவியன் ரிச்சர்ட்சும் (வெஸ்ட்இண்டீஸ்), 1980-களில் கபில்தேவும் (இந்தியா), 1990-களில் சச்சின் தெண்டுல்கரும் (இந்தியா), 2000-களில் முரளிதரனும் (இலங்கை), 2010-களில் விராட்கோலியும் (இந்தியா) சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிராக 2008ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 2010&2019ல் விளையாடிய 227 ஒருநாள் போட்டிகளில், 42 சதம் உட்பட 11,125 ரன் எடுத்திருந்தார். தவிர இவர், 2011ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

கடந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரருக்கான விருதை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றார். இவர், கடந்த ஆண்டு விளையாடிய 7 டெஸ்டில், 641 ரன், 19 விக்கெட் கைப்பற்றினார். சிறந்த முன்னணி வீராங்கனைக்கான விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனே கைப்பற்றினார். சிறந்த முன்னணி டுவென்டி20 வீரருக்கான விருதை விண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டு வென்றார்

கடந்த ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாம் சிப்லே, ஜாக் கிராலே, டேரன் ஸ்டீவன்ஸ், விண்டீசின் ஜேசன் ஹோல்டர், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இடம் பிடித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
2. பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தப்பணிக்காக வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ந்தேதி வெளியிடப்படும்
பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.