கிரிக்கெட்

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பஞ்சாப்: சென்னை அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம் + "||" + Punjab stumbled after losing wickets: Target of 107 runs for Chennai

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பஞ்சாப்: சென்னை அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம்

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பஞ்சாப்: சென்னை அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம்
சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சால் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது.
மும்பை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்க இருக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால்(0) பவுல்ட் ஆனார்.

இதையடுத்து தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கே.எல்.ராகுல்(5) ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் கெய்ல் 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, தீபக் ஹூடா(10), நிக்கோலஸ் பூரன்(0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

மறுபுறம் சாருக்கான் சற்று நிதானமாக ஆடி 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார். அரைசதத்தை நெருங்கிய சாருக்கான், சென்னை வீரர் சாம் கர்ரனின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதற்கடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாத நிலையில், பஞ்சாப் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாருக்கான் 47 ரன்கள் அடித்திருந்தார். சென்னை அணியில் அதிகபர்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 107 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சரிவில் இருந்து மீளுமா பஞ்சாப்?
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
2. கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் குறையாததால் பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
3. பஞ்சாபில் புதிதாக ஏற்படும் பாதிப்புகளில் 81% உருமாறிய கொரோனா: முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
4. கொரோனா பரவல் எதிரொலி: பஞ்சாப்பில் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் மூடல்
பஞ்சாப்பில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்கள் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது பஞ்சாப்பில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
5. கொரோனாவை கட்டுப்படுத்த, பஞ்சாபில் பள்ளிகள் மூடல்; 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.