கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் வெற்றி - தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் + "||" + Pakistan Won aginst South Africa in Final t20 Match

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் வெற்றி - தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் வெற்றி - தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
சென்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருந்தது.  

இந்நிலையில், டி20 தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். மார்க்ரம் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது நவாஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்துவந்த வென் டர் டஸ்சனுடன் ஜோடி சேர்ந்த மாலன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மாலன் 28 பந்துகளில் 33 எடுத்திருந்த நிலையில் அஸ்ரப் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வென் டர் டஸ்சன் அரை சதம் கடந்தார். அவர் 36 பந்துகளில் 2 சிக்சர்கள், 5 பவுண்டர்களில் உள்பட 52 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஹரிஸ் ரால்ஃப் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 144 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்கள் அஸ்ரப் மற்றும் ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஃப்பார்டியூன் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த பகர் சமான் கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக ஆடிய பகர் சமான் 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்து வில்லியம்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாமும், வில்லியம்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த முகமது ஹபீஸ் 10 ரன்னிலும், ஹைதர் அலி 3 ரன்னிலும், ஆசிப் அலி 5 ரன்னிலும், அஸ்ரப் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை எட்டி வெற்றிபெற்றது. கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 21 பந்துகளில் 25 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் பாகிஸ்தான் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் வில்லியம்ஸ் மற்றும் சிசண்டா மகலா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் அஸ்ரப் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர்நாயகன் விருது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு வழங்கப்பட்டது.           

தொடர்புடைய செய்திகள்

1. பாபர் அசாம் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
3. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.