கிரிக்கெட்

பென் ஸ்டோக்சுக்கு ஆபரேஷன் + "||" + To Ben Stokes Operation

பென் ஸ்டோக்சுக்கு ஆபரேஷன்

பென் ஸ்டோக்சுக்கு ஆபரேஷன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.
 பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை பாய்ந்து விழுந்து கேட்ச் செய்த போது இடது கையில் காயமடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். அவர் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுகிறார். அங்கு வருகிற 19-ந்தேதி காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்படுகிறது. அதன் பிறகு 12 வாரங்கள் வரை அவர் போட்டிகளில் விளையாட முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஜூன் மாதம் தொடக்கத்தில் உள்ளூரில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட முடியாது. 29 வயதான பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணிக்கு ரூ.12½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.