கிரிக்கெட்

தனிமைப்படுத்துதல் முடிந்து அணியுடன் இணைந்தார் நோர்டியா + "||" + Isolation is over Joined the team Nordia

தனிமைப்படுத்துதல் முடிந்து அணியுடன் இணைந்தார் நோர்டியா

தனிமைப்படுத்துதல் முடிந்து அணியுடன் இணைந்தார் நோர்டியா
மும்பை வந்தடைந்த அவர் ஐ.பி.எல். கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி 7 நாட்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார். இதையொட்டி கடந்த 6-ந்தேதி மும்பை வந்தடைந்த அவர் ஐ.பி.எல். கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி 7 நாட்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார். 

சில தினங்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் அந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள டெல்லி அணி நிர்வாகம், மூன்று முறை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலும் நோய் தொற்று இல்லை என்ற முடிவே வந்தது. இப்போது தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபட்டு அணிக்குரிய பாதுகாப்பு வளையத்திற்குள் அவர் இணைந்து விட்டதாக கூறியுள்ளது. நேற்று பயிற்சியில் ஈடுபட்ட நோர்டியா நாளை நடக்கும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.