கிரிக்கெட்

கொரோனாவில் இருந்து மீண்டார் ஹர்மன்பிரீத் கவுர் + "||" + Recovered from the corona Harmanpreet Kaur

கொரோனாவில் இருந்து மீண்டார் ஹர்மன்பிரீத் கவுர்

கொரோனாவில் இருந்து மீண்டார் ஹர்மன்பிரீத் கவுர்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹர்மன்பிரீத் கவுர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடந்த 30-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹர்மன்பிரீத் கவுர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘பரிசோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்திருப்பதை உங்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நன்றாக இருக்கிறேன். ஒவ்வொருவரும் கூடுதல் கவனமுடன் இருங்கள். இந்த வைரஸ் உண்மையிலேயே அபாயகரமானது. சுகாதாரத்துறையினர் கூறும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுங்கள்’ என்றார்.