கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு + "||" + IPL 2021: Rohit Sharma expects Mumbai Indians to be 'better' in middle overs

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: - பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.  இந்த ஆடுகளத்தில் நாங்கள் அடித்திருந்த ரன்கள் சவாலானவை என்றே நினைக்கிறேன். 

பவர் பிளேயை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இரு அணிகளுமே முயற்சித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடு ஓவர்களில் நாங்கள் சற்று சிறப்பாக பேட் செய்தோம் என நான் நினைக்கிறேன். இது போன்ற மைதானங்களில் அனைத்து வீரர்களும் பல போட்டிகள் விளையாடியுள்ளனர். 

பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது ஃபீல்டிங் இன்றைய போட்டியில் அசத்தலாக இருந்தது. இன்றைய போட்டியில் நடந்த ரன் அவுட்கள் மற்றும் கேட்ச்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லாவின் தந்தை உயிரிழப்பு
கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
2. ஐபிஎல்: ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
3. ஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களுரூ அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை
பெங்களுரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 159 ரன்கள் குவித்துள்ளது.