கிரிக்கெட்

அதிக சிக்சர் விளாசிய இந்தியர்: டோனியை முந்தினார் ரோகித் சர்மா + "||" + Most sixes Indian: Rohit Sharma ahead of Dhoni

அதிக சிக்சர் விளாசிய இந்தியர்: டோனியை முந்தினார் ரோகித் சர்மா

அதிக சிக்சர் விளாசிய இந்தியர்: டோனியை முந்தினார் ரோகித் சர்மா
ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்திய வீரர் என்ற சாதனையில் ரோகித் சர்மா டோனியை முந்தினார்.
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 2 சிக்சர் விரட்டினார். இதையடுத்து ஐ.பி.எல்.-ல் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 217 ஆக (203 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்திய வீரர் என்ற சாதனையை சென்னை கேப்டன் டோனியிடம் (216 சிக்சர்) இருந்து தட்டிப்பறித்தார். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் (351 சிக்சர்), பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் (237 சிக்சர்) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார். மும்பை வீரர் பொல்லார்ட் நேற்று 200 சிக்சர்களை (167 ஆட்டத்தில் 201 சிக்சர்) கடந்தார்.