கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் + "||" + IPL Match: Punjab Kings set a target of 196 for Delhi

ஐ.பி.எல். போட்டி: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல். போட்டி: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை,

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் அடித்த பஞ்சாப், முதல் விக்கெட்டுக்கு 62 பந்தில் 100 ரன்கள் அடித்தது. மயங்க் அகர்வால் 25 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 69 ரன்னில் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 12.4 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் ரன் வேகத்தில் தளர்வு ஏற்பட்டது. கேஎல் ராகுல் 45 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்தில் 15 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து டெல்லி அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தினால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தும் போது அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
2. ‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.
3. ‘ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும்’; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி
ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். போட்டியில் இருந்து நடராஜன் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.