கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூரு அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது + "||" + IPL Cricket: Maxwell, De Villiers Bangalore beat Bangalore by a hat-trick

ஐ.பி.எல். கிரிக்கெட்: மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூரு அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட்: மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூரு அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியாக அரைசதம் விளாசினர்.
சென்னை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வருண் சக்ரவர்த்தி வீசிய சுழற்பந்து வீச்சில் கோலி (5 ரன்) கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரஜத் படிதரும் (1 ரன்) அதே ஓவரில் வீழ்ந்தார். இதன் பின்னர் தேவ்தத் படிக்கல்லுடன், கிளைன் மேக்ஸ்வெல் கைகோர்த்தார். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அட்டகாசம்

இதன் பிறகு தான் மேக்ஸ்வெல்லின் சரவெடி ஆரம்பித்தது. தனக்கே உரிய ‘ரிவர்ஸ்வீப்’ ஷாட் உள்பட மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 25 ரன்களில் (28 பந்து) ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு கால்பதித்த டிவில்லியர்சும் கொல்கத்தாவின் பந்து வீச்சை துவம்சம் செய்ய தவறவில்லை. அணியின் ஸ்கோர் 148 ஆக உயர்ந்த போது மேக்ஸ்வெல் 78 ரன்களில் (49 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

இறுதிகட்டத்தில் டிவில்லியர்சின் சூறாவளி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொல்கத்தா பவுலர்கள் விழிபிதுங்கினர். ஆந்த்ரே ரஸ்செலின் இரண்டு ஓவர்களில் மட்டும் அவர் மொத்தம் 5 பவுண்டரியும், 2 சிக்சரும் பதம் பார்த்தார்.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் சென்னை மைதானத்தில் ஒரு அணி 200 ரன்களை எட்டியது இதுவே முதல் முறையாகும். டிவில்லியர்ஸ் 76 ரன்களுடனும் (34 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), கைல் ஜாமிசன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 6 ஓவர்களில் மட்டும் பெங்களூரு வீரர்கள் 87 ரன்கள் திரட்டினர்.

பெங்களூரு வெற்றி

அடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா வீரர்கள் விளையாடினர். இமாலய இலக்கு என்பதால் அவர்கள் துரிதம் காட்ட வேண்டிய நெருக்கடியில் அவசரகதியில் ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 31 ரன்னும் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் இயான் மோர்கன் 29 ரன்னும் எடுத்தனர்.

20 ஓவர்களில் அந்த அணியால் 8 விக்கெட்டுக்கு 166 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். ஒரு ஐ.பி.எல். தொடரில் முதல் 3 ஆட்டங்களில் பெங்களூரு அணி வெற்றி கண்டிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

கேப்டன்கள் கருத்து

வெற்றிக்களிப்பில் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும் போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன்’ என்றார்.

கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இது பெங்களூரு அணிக்குரிய நாளாக அமைந்தது. சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது. ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது. சென்னையை விட்டு கிளம்பி இனி அடுத்த இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சியே’ என்றார்.

ஸ்கோர் போர்டு

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

விராட் கோலி (சி) திரிபாதி

(பி) வருண் 5

தேவ்தத் படிக்கல் (சி)

திரிபாதி (பி) பிரசித் 25

ரஜத் படிதர் (பி) வருண் 1

மேக்ஸ்வெல் (சி) ஹர்பஜன்சிங்

(பி) கம்மின்ஸ் 78

டிவில்லியர்ஸ் (நாட்-அவுட்) 76

ஜாமிசன் (நாட்-அவுட்) 11

எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 204

விக்கெட் வீழ்ச்சி: 1-6, 2-9, 3-95, 4-148

பந்து வீச்சு விவரம்

ஹர்பஜன்சிங் 4-0-38-0

வருண் சக்ரவர்த்தி 4-0-39-2

ஷகிப் அல்-ஹசன் 2-0-24-0

கம்மின்ஸ் 3-0-34-1

பிரசித் கிருஷ்ணா 4-0-31-1

ஆந்த்ரே ரஸ்செல் 2-0-38-0

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நிதிஷ் ராணா (சி) தேவ்தத்

(பி) சாஹல் 18

சுப்மான் கில் (சி) சப்

(கிறிஸ்டியன்) (பி) ஜாமிசன் 21

திரிபாதி (சி) சிராஜ் (பி)

வாஷிங்டன் 25

மோர்கன் (சி) கோலி (பி)

ஹர்ஷல் 29

தினேஷ் கார்த்திக்

எல்.பி.டபிள்யூ (பி) சாஹல் 2

ஷகிப் அல்-ஹசன் (பி)

ஜாமிசன் 26

ஆந்த்ரே ரஸ்செல் (பி)

ஹர்ஷல் 31

கம்மின்ஸ் (சி) டிவில்லியர்ஸ்

(பி) ஜாமிசன் 6

ஹர்பஜன்சிங் (நாட்-அவுட்) 2

வருண் சக்ரவாத்தி

(நாட்-அவுட்) 2

எக்ஸ்டிரா 4

மொத்தம் (20 ஓவர்களில்

8 விக்கெட்டுக்க) 166

விக்கெட் வீழ்ச்சி: 1-23, 2-57, 3-66, 4-74, 5-114, 6-155, 7-161, 8-162

பந்து வீச்சு விவரம்

முகமது சிராஜ் 3-0-17-0

ஜாமிசன் 3-0-41-3

யுஸ்வேந்திர சாஹல் 4-0-34-2

வாஷிங்டன் சுந்தர் 4-0-33-1

மேக்ஸ்வெல் 2-0-24-0

ஹர்ஷல் பட்டேல் 4-0-17-2

தொடர்புடைய செய்திகள்

1. 20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
3. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
4. டி20 உலகக்கோப்பை: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமன் அபார வெற்றி
உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஓமன் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
5. சென்னை அணிக்காக முதல் வீரராக டோனி தக்கவைப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக டோனி முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.