கிரிக்கெட்

திடீர் மாரடைப்பு முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை + "||" + Muttiah Muralitharan admitted to hospital for cardiac treatment

திடீர் மாரடைப்பு முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

திடீர் மாரடைப்பு முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:

 நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 ஐபிஎல் தொடரில் ஆடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இருந்து  வருகிறார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் தங்கி கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று பயிற்சியின் போது முத்தையா முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய  பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையிலேயே இவருக்கு நெஞ்சில் வலி இருந்துள்ளது. இதையடுத்து அவர் தீவிர சோதனைகளை செய்து இருக்கிறார். ஸ்கேன் எடுத்து இருக்கிறார். அதன்பின் சென்னைக்கு ஐபிஎல் ஆட வந்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இவருக்கு மீண்டும் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அவரின் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.