கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் + "||" + IPL 2021 Live Cricket Score, CSK vs RR: Rajasthan Royals' 189-run chase

ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்துள்ளது.
மும்பை,

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக டுபிலிஸிஸ் 33, கைக்வாட் 10, மொத்தீன் அலி 26, ரெய்னா 18, ராயுடு 27, ஜடேஜா 8, தோனி 18, சாம் கர்ரன் 13, பிராவோ 20 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சேட்டன் சக்கரியா 3 விக்கெட், ரஹ்மான் 1, மோரிஸ் 2, ராகுல் டிவடியா 1 விக்கெட் வீழ்த்தினர். 189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி  களமிறங்கி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டியில் அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா?
சென்னை அணிக்காக நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு டோனி பதிலளிக்கையில் 'பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்’ என்றார்.
2. அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் “100” : சென்னை அணி 189 ரன்கள் குவிப்பு!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி அணி
நடப்பு தொடரில் 7 வெற்றி, 2 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் ஜரூராக பயணிக்கும் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும்.
4. ஐ.பி.எல். போட்டி: இங்கிலாந்தில் இருந்து அமீரகம் வரும் வீரர்களை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருகை தரும் ஒவ்வொரு வீரர்களையும் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று ஐ.பி.எல். அணி நிர்வாகங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியில் லீவிஸ் ஒப்பந்தம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு லீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.