கிரிக்கெட்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி + "||" + Chennai Super Kings won by 45 run

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி

ஐபிஎல்:  ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை,

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. 

இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர் டு பிளஸிஸ் அதிரடியாக ஆடினார். 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்த டுபிளசிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.  மோயின் அலி (26 ரன்கள்) சுரேஷ் ரெய்னா ( 18 ரன்கள்),  ராயுடு (27 ரன்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188- ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, 189- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் மிரட்டினார். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர்  35- பந்துகளில் 49-ரன்கள் அடித்திருந்த நிலையில் ஜடேஜா பந்தில் போல்டு ஆனார். இதன்பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

மோயின் அலி, சாம் கரன் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய  ராஜஸ்தான் அணி  9 விக்கெட் இழப்பிற்கு 143-ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம்  45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக மோயின் அலி 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொல்கத்தா அணி 2 வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. மும்பை அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.
3. சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், இயக்குனருமான எல்.சபாரத்தினம் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
5. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.