கிரிக்கெட்

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி சென்னை அணி? + "||" + Towards a hat trick victory Chennai team

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி சென்னை அணி?

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி சென்னை அணி?
தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் படுதோல்வி அடைந்த சென்னை அணி, அடுத்த ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது.
அதுவும் ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அதிகபட்சமாக பிளிஸ்சிஸ் 33 ரன் எடுத்த போதிலும் ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பால் 188 ரன்கள் வரை திரட்டியது. அதன் பிறகு மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் ராஜஸ்தான் முற்றிலும் நிலைகுலைந்தது. அதே உத்வேகத்துடன் ஹாட்ரிக் வெற்றி பெறும் உத்வேகத்துடன் சென்னை அணி வியூகங்களை தீட்டி வருகிறது.

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி அதன் பிறகு மும்பை, பெங்களூரு அணிகளிடம் சரண் அடைந்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக தென்பட்ட போதிலும் கொல்கத்தாவின் ஆட்டம் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. தனது முதல் 3 ஆட்டங்களையும் சென்னை சேப்பாக்கத்தில் ஆடிய கொல்கத்தா அணி இந்த ஆடுகளம் புரியாத புதிராக இருப்பதாகவும், ஒருவழியாக இங்கிருந்து கிளம்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார். மும்பை வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்ற போதிலும் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் தான் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு அடங்கியிருக்கிறது.
(குறிப்பு: நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)