பெங்களூரு அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?


பெங்களூரு அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?
x
தினத்தந்தி 22 April 2021 3:24 AM GMT (Updated: 22 April 2021 3:24 AM GMT)

தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத ஒரே அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வலம் வருகிறது.

இந்த சீசனில் இதுவரை தனது 3 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத ஒரே அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வலம் வருகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்த ஆட்டங்களில் 6 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சையும், 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சையும் வீழ்த்தியது. பேட்டிங்கில் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல்லும், பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசனும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்துள்ளனர். இதுவரை வேகம் குறைந்த சென்னை ஆடுகளத்தில் கலக்கிய பெங்களூரு அணி பேட்டிங்குக்கு உகந்த மும்பை மைதானத்தில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கிறது. அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி அந்த அணி தங்களை விரைவாக மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 222 ரன் இலக்கை விரட்டுகையில் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. முந்தைய ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. ராஜஸ்தான் வலுவாக அணியாக காணப்பட்டாலும் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் ‘கிளிக்’ ஆனால் மட்டுமே பெங்களூரு அணியின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
(குறிப்பு: நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story